பெங்களூரு - எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரெயில்...ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
பெங்களூருவில் காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் கிருஷ்ணராஜபுரத்திற்கு காலை 5.23 மணிக்கும், சேலத்திற்கு காலை 8.13 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 9 மணிக்கும், திருப்பூருக்கு காலை 9.45 மணிக்கும், கோவைக்கு காலை 10.33 மணிக்கும், பாலக்காட்டிற்கு காலை 11.28 மணிக்கும், திருச்சூருக்கு மதியம் 12.28 மணிக்கும் சென்றடைகிறது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் ரெயில் நிற்கிறது.
மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் திருச்சூருக்கு மதியம் 3.17 மணிக்கும், பாலக்காட்டிற்கு மாலை 4.35 மணிக்கும், கோவைக்கு மாலை 5.20 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6.03 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 6.45 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.18 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு இரவு 10.23 மணிக்கும் சென்றடைகிறது. திரும்பும்போதும் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
கரூர்: டிப்பர் லாரி கவிழ்ந்து 3 பேர் பலியான சோகம்
கரூர் அருகே தென்னிலை பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி திடீரென கவிழ்ந்தது. இதில், லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் மணல் குவியலில் சிக்கி பலியானார்கள்.
இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும், அந்த உரிமை எங்களுக்கு தேவையில்லை என எட்டி உதைக்கும் ஆட்சியாளர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் திறன் படைத்த தமிழ் அரசை அமைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு...இன்றைய நிலவரம்
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,310-க்கும், சவரன் ரூ.90,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750க்கு விற்கப்படு்கிறது 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 868 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
நவம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
மேஷம்
குடும்பத்தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகளுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர வழிவகை செய்யப்படுகிறது. அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி, மத்திய அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, அதற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தாமதமாக தொடங்கியது. ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்தவர்கள், இந்த இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையால், கடந்த 22-ந்தேதி விடப்பட்ட விடுப்புக்கு ஈடாக சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று தேர்தல் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. இதற்காக நியமனம் செய்யப்பட்டு உள்ள தொடர்புடைய ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.