இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

Update:2025-10-03 09:11 IST
Live Updates - Page 2
2025-10-03 12:30 GMT

6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ரவீந்திர ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா.

2025-10-03 09:04 GMT

முன்ஜாமீன் கோரி ஆனந்த் மனு: விசாரணை தொடக்கம்

கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை துவங்கியது. மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஜோதிராமன் முன்பாக முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நாமக்கல் விவகாரத்தில் ஒருவரின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது

2025-10-03 08:21 GMT

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 



திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய 14 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2025-10-03 08:07 GMT

தவெகவினர் அடாவடி நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என கூறுவதா..? - ஐகோர்ட்டு காட்டம்


கரூர் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் இன்று (03.10.2025) விசாரணைக்கு வந்தது. 


2025-10-03 07:43 GMT

தவெக மாவட்ட செயலாளருக்கு முன் ஜாமீன் மறுப்பு

நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

2025-10-03 07:29 GMT

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுராக் தாக்கூர் கடிதம்


கரூரில் உள்ள சூழ்நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-10-03 07:24 GMT

பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை - ஐகோர்ட்டு மதுரை கிளை

ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று நடந்த விசாரணையின்போது, “யாரும் மக்களை கட்டாயப்படுத்தி வர சொல்லவில்லை. குடிமக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். எந்த கட்சியாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமை. அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் அவசியம். குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது அவசியம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

2025-10-03 07:21 GMT

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று நடந்த விசாரணையின்போது, “போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. கோர்ட்டை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

2025-10-03 07:18 GMT

மக்களும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் - ஐகோர்ட்டு மதுரை கிளை காட்டம்

கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் மக்களும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2025-10-03 06:36 GMT

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை தொடங்கியது


கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 9 வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை அமர்வில் விசாரணை தொடங்கியது.

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரிய மனு, தவெக நிர்வாகிகள் ஆனந்த் - நிர்மல் குமாரின் முன்ஜாமீன் மனுக்கள், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய ஆதவ் அர்ஜுனா மனு என 3 மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்