இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

Update:2025-05-04 08:18 IST
Live Updates - Page 3
2025-05-04 05:38 GMT

பத்ரிநாத் கோவில் திறப்பு - 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம்


இன்று பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் முழுவதும் சுமார் 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பத்ரிநாத்தில் உள்ள விநாயகர், ஆதி கேதரேஷ்வர், ஆதி குரு சங்கராச்சாரியர் மற்றும் மாதா மூர்த்தி கோவில் உள்ளிட்ட சன்னதிகளும் திறக்கப்பட்டன.


2025-05-04 03:46 GMT

அர்ஜுன் தாஸின் அடுத்த படம் 'டார்பிடோ'


மலையாளத்தில் மோகல்லால் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'துடரும்' பட இயக்குனர் அர்ஜுன் தாஸின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'டார்பிடோ' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் அவருடன் பகத் பாசில், பிரேமலு நடிகர் நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


2025-05-04 03:44 GMT

"தோல்விக்கான பழியை நானே ஏற்று கொள்கிறேன்.." - கேப்டன் தோனி


தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, "நான் இறுதிக் கட்டத்தில் இரண்டு பெரிய ஷாட்டுகளை ஆடி மற்ற வீரர்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்து இருக்க வேண்டும். நான் செய்ததுதான் தவறு. எனவே அதற்கான பழியை நானே ஏற்றுக் கொள்கின்றேன். பெங்களூரு அணியில் ஷெப்பர்டு கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்" என்று கூறினார். 


2025-05-04 03:41 GMT

ஐபிஎல்: கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்


ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதலில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதுகின்றன.



2025-05-04 03:02 GMT

ஒடிசா: கல்லூரி பெண்களின் ஆடையை கிழித்து தாக்குதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


இந்த சம்பவம் நடந்தபோது அருகில் கல்லூரியின் காவல் பணியாளர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகனம் இருந்ததாகவும், இருப்பினும் யாரும் தங்கள் உதவிக்கு வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

அதே சமயம், காவல் பணியாளர் ஒருவர். "நீங்கள் குட்டையான உடைகளை அணிந்து திரிவதால்தான் இதுபோல் நடக்கிறது" என்று கூறியதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.


2025-05-04 02:59 GMT

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: முதல் 7 நாட்கள் வெயில் ஆறுதலாக இருக்குமாம்!


கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. ஆரம்பமே அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மழை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


2025-05-04 02:55 GMT

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ள 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.


2025-05-04 02:54 GMT

4 நாட்களே தாக்கு பிடிக்கும் போருக்கான ஆயுதங்கள்... பாகிஸ்தானின் உண்மை நிலை என்ன?


இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவத்தில் கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. பாகிஸ்தானின் ஆயுத தொழிற்சாலையானது. ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை விநியோகித்து வருகிறது.

2025-05-04 02:51 GMT

இன்றைய ராசிபலன் - 04.05.2025


துலாம்

வீட்டில் மகிழ்ச்சி சூழும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

Tags:    

மேலும் செய்திகள்