தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கலெக்டர்
திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களை கையெடுத்து வணங்கிய கலெக்டர் தர்ப்பகராஜ்., தற்போது வரை 250 டன் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
10 நபர்களோடு சேர்ந்து மனுதாரர் தீபத் தூணிலும் தீபமேற்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார. மனுதாரர் கூட்டமாக சென்று பிரச்சினை ஏற்படுத்தியதால் அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் உள்ளிருப்பு போராட்டம்
இண்டிகோ விமான சேவை ரத்தால், 154 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 100க்கும் அதிகமான இண்டிகோ விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பணிநேரம் தொடர்பான விதிகள் கடுமையாக உள்ளதாக கூறி இண்டிகோ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணலி புதுநகரில் அதிகபட்ச மழை பதிவு
சென்னையில் நேற்று காலை 8.30 முதல் இன்று அதிகாலை 5 வரை அதிகபட்சமாக மணலி புதுநகரில் 19.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. எண்ணூரில் 18.9 செ.மீ., விம்கோ நகரில் 17.8 செ.மீ., கத்திவாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் போராட்டம்: 13 பேர் கைது
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில் போலீஸார் காயமடைந்த நிலையில், இந்து முன்னணியினர் கைது. பாஜக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்ஜி.சூர்யா, பிரசாந்த் உள்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஜய் புதுச்சேரி பயணம் ரத்து
புதுச்சேரியில் சாலைவலத்துக்கு அனுமதி கிடைக்காததால், தவெக தலைவர் விஜயின் நாளைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைவலத்துக்கு அனுமதி மறுத்த புதுச்சேரி காவல் துறை, பொதுக்கூட்டம் நடத்த அனுமதிப்பதாகக் கூறியுள்ளது.
முற்றிலும் வலு குறைந்த டிட்வா புயல்.. 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"பராசக்தி" படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வெளியான தகவல்
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'பராசக்தி'. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.