இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

Update:2025-05-05 08:44 IST
Live Updates - Page 2
2025-05-05 06:52 GMT

'சூர்யா 46' - படப்பிடிப்புக்கு முன்பே விற்கப்பட்ட ஓடிடி உரிமம்...இத்தனை கோடிக்கா?


சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


2025-05-05 06:50 GMT

வணிகர் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு


ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வணிகர் சங்கங்கள் மாநாடுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகத்தில் இன்று மாலை நடக்கிறது.


2025-05-05 06:49 GMT

'இளம் வயதிலேயே...' - வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய பிரதமர் மோடி


விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.நாட்டில் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். இதனிடையே, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடுவதாக பிரதமர் பாராட்டினார்.


2025-05-05 06:47 GMT

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கைது: பூச்சாண்டிகளுக்கு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல - எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரக்கோணம் எம்.ஆர்.எப். அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும். மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-05-05 06:37 GMT

சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - 4 பேர் மீது வழக்கு


சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலியான சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர் சிவக்குமார், பொறியாளர் குணசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், மேற்பார்வையாளர் கவுதம், உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-05-05 06:16 GMT

பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்


சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது கூடுதல் ஜாமீன் நிபந்தனைகளை விதிக்க கோரும் சிபிஐ-யின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

மேலும் சிலை கடத்தல் வழக்கில் ஜாமீன் பெற்ற பொன்.மாணிக்கவேல், தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் உள்ளதால் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


2025-05-05 05:31 GMT

ஆனைமலை மலையேற்றம் - கேரளாவை சேர்ந்த டாக்டர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஜ்சல் சைன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அஞ்சல் சைன் (26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகிய இருவர் டிரக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் பதிவு செய்து முறையான அனுமதி பெற்று மலையேறினர்.

8 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங் சென்று திரும்பிய நிலையில், அஞ்சல் சைனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

2025-05-05 05:22 GMT

முதல் முறையாக சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் 18ஆம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா செல்ல உள்ளார். 


2025-05-05 04:54 GMT

தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


2025-05-05 04:52 GMT

வங்காளதேச டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா..?


வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாண்டோ அந்த பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது வங்காளதேச டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026 டி20 உலகக்கோப்பை வங்காளதேச டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்