தங்கப் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறித்த கும்பல் கைது
ஓசூர் அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
'ஜனநாயகன்' - படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் விஜய்
'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொண்டு இன்று மதுரையில் இருந்து விஜய் சென்னை திரும்ப உள்ளார்.
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் காலை 6.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகி உள்ளது.
மியான்மரில் ஏற்கனவே அதிகாலை 5.03 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் அதிகாலை 3.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு 1.38 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு - சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்
நாடு முழுவதும் நேற்று நடந்த நீட் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வருகைப் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாத்: எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
செகந்திராபாத் பட்னி நகரில் எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தின் 4வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஆவணங்கள், கணினிகள், தளவாட பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்
கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் வெற்றி... புள்ளிப்பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி) உள்ளது. தலா 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை மற்றும் குஜராத் அணிகள் முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் (12 புள்ளி) 5வது இடத்தில் உள்ளது.
நகை வியாபாரியை கட்டி போட்டு ரூ.20 கோடி வைரம் திருடப்பட்ட சம்பவம் - 4 பேர் கைது
சந்திரசேகர் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளுடன் நேற்று வடபழனியில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஓட்டல் அறையில் மறைந்திருந்த 4 பேர் சந்திரசேகரை கட்டி போட்டுவிட்டு ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.