இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

Update:2026-01-07 09:09 IST
Live Updates - Page 2
2026-01-07 08:03 GMT

ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் இணைந்த சீமானின் 'தம்பி' திரைப்படம் 


சீமான் எழுதி இயக்கிய 'தம்பி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

2026-01-07 08:00 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வரும் 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. 

2026-01-07 07:54 GMT

டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு பொறுப்பேற்க தயார் - மாதம்பட்டி ரங்கராஜ் 


ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.

2026-01-07 07:47 GMT

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம் 


ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

2026-01-07 07:45 GMT

காங்கிரஸ் போனால் என்ன.. தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி..! 


தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது.

2026-01-07 07:25 GMT

“அமித் ஷா-வா? அவதூறு ஷா-வா..?” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி 


திண்டுக்கல்லில் 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், “நகரங்கள் மட்டுமல்லாது கிராமப் புறங்களும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. மக்களின் முக மலர்ச்சியைக் காண ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியை விட, திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 19 லட்சம் மெட்ரின் டன் அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும். வடமாநிலங்களைப் போல வெறுப்பு பிரசாரம் செய்யலாம் என நினைக்கிறார்கள். அமித் ஷாவா? அவதூறு ஷாவா?

உண்மையான பக்தர்கள் திமுகவை பாராட்டுவார்கள். திமுக ஆட்சியில் 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

2026-01-07 07:15 GMT

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: ஜன. 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை, வரும் 20- ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல என்றும், ஆவணங்களை மொழிபெயர்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

2026-01-07 07:07 GMT

கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி அதிமுக வழக்கு 


கே.என். நேரு ரூ. 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது.

2026-01-07 07:05 GMT

தியேட்டர்களில் மட்டுமல்ல… ஓடிடியையும் கலக்க வரும் பாலையாவின் "அகண்டா 2" 


தியேட்டர்களில் ஹிட் கொடுத்த அகண்டா 2 படம், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

2026-01-07 07:03 GMT

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது 


தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்