இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025

Update:2025-10-07 09:13 IST
Live Updates - Page 5
2025-10-07 04:51 GMT

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

2025-10-07 04:30 GMT

இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்: மெல்போர்ன் டி20 போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகிறது.


2025-10-07 04:28 GMT

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு


ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


2025-10-07 04:27 GMT

புஸ்சி ஆனந்த் முன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது


2025-10-07 04:25 GMT

8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை - மத்திய மந்திரி தகவல்


8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவையாக மாற்றப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.


2025-10-07 04:24 GMT

திருச்சி வழியாக செல்லும் 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.


2025-10-07 04:20 GMT

காலில் அணியவேண்டியதை கையில் அணிந்தபோதே அறிவழிந்துபோனார்: வக்கீலுக்கு வைரமுத்து கண்டனம்


சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வக்கீல், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


2025-10-07 04:14 GMT

பீகார் தேர்தலில் போட்டியிடுவேன்; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு


வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரும் இடம்பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.


2025-10-07 04:13 GMT

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி: டைட்டிலை அறிவித்த படக்குழு!


வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு "அரசன்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

2025-10-07 04:12 GMT

ஈகுவடாரில் அதிபருக்கு எதிராக போராட்டம் வலுத்ததால் அவசர நிலை அறிவிப்பு


ஈகுவடாரில் டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்