இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025

Update:2025-11-07 09:35 IST
Live Updates - Page 2
2025-11-07 08:48 GMT

கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

காஞ்சிபுரம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை. கோவிலுக்குள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்யவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-11-07 08:14 GMT

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி

தூத்துக்குடி,

ராமநாதபுரம்,

விருதுநகர்,

சிவகங்கை,

மதுரை,

தேனி,

திண்டுக்கல்,

திருச்சி,

நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-07 08:04 GMT

ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர். - கனிமொழி எம்.பி. பேச்சு


பெண் மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

2025-11-07 08:03 GMT

தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பானதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

2025-11-07 08:01 GMT

கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி


எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், அவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


2025-11-07 07:31 GMT

கரூர் கூட்ட நெரிசல்: யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய் - வைகோ தாக்கு 


2011-ம் ஆண்டு செய்த தவறுக்காக ஓ.பன்னீர் செல்வம் தற்போது அனுபவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

2025-11-07 07:25 GMT

நாயகன் படத்தின் மறுவெளியீட்டிற்குத் தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு

நாயகன் படத்தை வெளியிடும் உரிமை தன்னிடம் உள்ள நிலையில், அனுமதியின்றி படத்தை வெளியிட்டுள்ளதாக கூறி எஸ்.ஆர்.பில்ம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர் ராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடித்துள்ள நாயகன் படத்தின் மறுவெளியீட்டிற்குத் தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஏடிஎம் புரொடக்ஷன்ஸ், வி.எஸ். பிலிம்ஸ் இண்டர்னேஷனல் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் ரீ-ரிலீஸ்க்கு தடை விதிக்க நீதிபதி என்.செந்தில்குமார் மறுத்து விட்டார் .

தீர்ப்புக்கு முன்னதாக நீதிபதி செந்தில்குமார் கூறுகையில், “நாயகன் படத்தை 16 முறை பார்த்துள்ளேன், காட்சி வாரியாக இப்போதும் என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

2025-11-07 06:54 GMT

பெண்கள் தங்கும் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஓசூர் தனியார் நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசிய கேமரா வைத்த நீலு குமாரியின் ஆண் நண்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கைதான ரவி பிரதாப் சிங்கை ஓசூர் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். முன்னதாக நீலு குமாரி கைதான தகவல் அறிந்ததும் ரவி பிரதாப் சிங் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

2025-11-07 06:44 GMT

நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்டு உத்தரவு


தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025-11-07 06:43 GMT

இந்தியாவுக்கு பாகிஸ்தான்.. சூர்யகுமார் யாதவ் சொன்னது சரியே - பாக்.வீரர் ஒப்புதல்


ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி 3 முறை வீழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்