’பராசக்தி’ பட வழக்கு: தடை உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு
ஜனநாயகனை தொடர்ந்து நாளை (ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் - தமிழக அரசு
பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி வருணகலச பூஜை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி அன்று மலை மீது உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இன்று 9-1-2026 மார்கழி மாத கடைசி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர். அதனுடன் அடிவாரத்தில் பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர்.
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்
தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இன்று கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகனுக்கு விழுந்த முட்டுக்கட்டை.. தொடர்ந்து இழுபறியில் பராசக்தி
ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா இன்று உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது என்றும், இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஜனநாயகனைத் தொடர்ந்து நாளை (ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது.
21-ம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
பொங்கல் எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயரும் மல்லிகை பூ விலை.!
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மல்லிகை பூ விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 3 பேர் பலி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 415வது நாளாக போர் நீடித்து வருகிறது.
ஜனநாயகன் சென்சார் வழக்கு: நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு
ஜனநாயகன் சென்சார் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கவும் சென்சார் வாரியத்திற்கு உத்தரவிடட்பட்டது. ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.