இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

Update:2025-10-10 09:39 IST
Live Updates - Page 4
2025-10-10 05:32 GMT

குரூப் 1 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


தேர்வர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.


2025-10-10 05:29 GMT

திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி

திருநெல்வேலி அருகே திடியூரில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயை ஆக்கிரமித்து நீர் எடுத்து சுத்திகரிக்காமல் பயன்படுத்தியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விலங்கு, எலிகளின் ரத்தம், சிறுநீர் போன்றவைகள் தண்ணீரில் கலந்து இருப்பதன் காரணமாக இந்த காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே மறு உத்தரவு வரும் வரை பொறியியல் கல்லூரியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-10-10 05:18 GMT

உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்


உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு அணிகள் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு 44-45, 45-30, 45-33 என்ற செட் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.


2025-10-10 05:17 GMT

ஓய்வு பெற என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை: அஸ்வின்


அணி நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் ஓய்வு முடிவை எடுத்ததாக பேசப்பட்டது.


2025-10-10 05:15 GMT

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்


2025-10-10 05:14 GMT

பிரசார சுற்றுப்பயண தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்


2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


2025-10-10 05:10 GMT

மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத் காம்போ.. எந்த படத்தில் தெரியுமா?


'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-10-10 05:08 GMT

இந்திய பயணம் நிறைவு: இங்கிலாந்து புறப்பட்டார் கீர் ஸ்டார்மர்


2 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று முன் தினம் இந்தியா வந்தார். மும்பை வந்த அவருக்கு இந்திய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றப்பின் கீர் ஸ்டாமர் மேற்கொண்ட முதல் இந்திய பயணம் இதுவாகும்.



2025-10-10 05:07 GMT

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.


2025-10-10 05:06 GMT

சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை


சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்