இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025

Update:2025-03-11 10:23 IST
Live Updates - Page 2
2025-03-11 11:30 GMT

இன்று பிற்பகல் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில், 17 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்துள்ளன. காற்று, மழை ஓய்ந்த பின் விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கத் தொடங்கின.

2025-03-11 11:28 GMT

சென்னை கோவிலம்பாக்கத்தில் கடந்த மார்ச் 5ம் தேதி கேஸ் கசிந்த விபத்தில் தந்தை, மகள், பேரன் என மூவர் உயிரிழந்தனர்.முனுசாமி(75) என்பவரும் அவரது மகள் சாந்தி(45), பேரன் ஹரிஹரன் (27) என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த தீக்காயமுற்ற ராணி(70) என்பவருக்கு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியதாக உயிரிழக்கும் முன்பு சாந்தி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

2025-03-11 11:23 GMT

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரெயிலை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரெயிலை ஆயுதமேந்திய குழுக்கள் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரெயிலை கடத்தியதாக பலோச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2025-03-11 10:36 GMT

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38ஆவது கூட்டம் காணொலியில் நடைபெற்று வருகிறது .

2025-03-11 10:33 GMT

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்.

2025-03-11 10:26 GMT

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள 23 பேரை பணி நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2025-03-11 10:14 GMT

தமிழகத்திற்கான உதவிகளை தர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்களையும் அவர்களின் கலாசாரத்தையும் போற்றுகிறேன். நாம் அனைவரும் இந்திய தாயின் மகன்கள்; இதில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மக்களவையில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

2025-03-11 08:57 GMT

உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் மரத்தின்கீழ் நின்ற ஓய்வு பெற்ற காவலர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மழைக்காக புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியது. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

2025-03-11 07:37 GMT

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்