இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

Update:2025-12-11 08:59 IST
Live Updates - Page 2
2025-12-11 11:35 GMT

காவல்துறை அதிகாரி இஷா சிங்- க்கு புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம் பாராட்டு

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில் காவல்துறை அதிகாரி இஷா சிங் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு எங்களுடைய பாராட்டுகள். காவல்துறையினர் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என புதுச்சேரி உள்துறை மந்திரி நமச்சிவாயம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2025-12-11 11:33 GMT

எஸ்.ஐ.ஆர் நடைமுறை டிச.14 வரை நீட்டிப்பு

எஸ்.ஐ.ஆர் நடைமுறை டிச.14 வரை நீட்டிப்பு

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிச.14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2025-12-11 11:14 GMT

பாகிஸ்தானில் போராட்டம்

சிந்து தேசம் என்ற பெயரில் தனி நாடு கோரி பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்தன. சிந்து மாநிலத்தின் தலைநகரான கராச்சியில் நடந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டதால் வன்முறை சூழல் உண்டாகி உள்ளது.

2025-12-11 11:11 GMT

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்; நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க விவகாரத்தில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

2025-12-11 11:11 GMT

திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிச.13ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பாக இரா.பிரபு தாக்கல் செய்த மனுவில், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 முதல் 5 மணி வரை உண்ணாவிரத இருக்க நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2025-12-11 11:09 GMT

தர்காவிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவிற்கு மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

2025-12-11 10:21 GMT

மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக கோரிக்கை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவை சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. ஆட்சி நிர்வாகத்தில் பிற இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறி உள்ளார்.

2025-12-11 09:48 GMT

பிரதான சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பிரதான சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரேஷன் கடைகளுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார்.

2025-12-11 09:44 GMT

எஸ்.ஐ.ஆர் வழக்கு - ஜனவரி இறுதியில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்டு

" எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது. இம்மாதம் வாதங்களை முடித்து, ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் அறிவித்துள்ளார்.

2025-12-11 09:41 GMT

பனையூர்: காத்திருக்கும் தவெக உறுப்பினர்கள்

பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து மனு அளிக்க 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருவதால் உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்