அதிவேகம் -நொடியில் பிரிந்த கல்லூரி மாணவியின் உயிர்
செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மிஸ்பா பாத்திமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
கவலைக்கிடமான நிலையில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு காரில் புதுச்சேரி சென்ற 10 மாணவர்கள், சென்னை திரும்பும்போது போட்டி போட்டு காரை இயக்கியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம்: செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி ஸ்விப்ட் கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது செம்மேடு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் இல்லை, விபத்து குறித்து சத்தியமங்களம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்
காஞ்சிபுரம் மாவட்டம் நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள கடைகளில் பயங்கர தீ விபத்து
கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"காந்தா" முதல் "சூப்பர் மேன்" வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து. பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 12.53 லட்சம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், இரட்டைப்பதிவு, முகவரி மாற்றம் செய்த 1,40,640 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் குழு
இந்திய கம்யூனிஸ்ட் குழு மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வழங்க வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? - அண்ணாமலை கேள்வி
அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுப்பதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்: பயனர்களுக்கு மெட்டா கொடுத்த சூப்பர் அப்டேட்
சமூக வலைத்தளங்களில் பயனர்கள் இடையே அதிகம் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்களே இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.