இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

Update:2025-04-16 09:05 IST
Live Updates - Page 2
2025-04-16 09:17 GMT

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

2025-04-16 09:10 GMT

சென்னையில் இன்று கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (16-04-2025) இடி மின்னலுடன் கனமழை நீடிக்கும் என்றும், சென்னையில் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-04-16 08:38 GMT

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று பெய்த திடீர் மழை காரணமாக தண்ணீர் தேங்கியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2025-04-16 08:07 GMT

ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். குந்துகால் பகுதியிலிருந்து இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 7 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

2025-04-16 08:03 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான், நடிகை சாகரிகா கட்கேவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு படேசின் கான் என பெயர்சூட்டியுள்ளனர்.

2025-04-16 07:02 GMT

சென்னை நகரின் பல்வேறு பகுதிகள், புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் சராசரி 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சாலிகிராமம், நுங்கம்பாக்கத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 

2025-04-16 06:58 GMT

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பின்னோக்கு கலையரங்கம் அருகே ரூ. 50 லட்சம் செலவில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

2025-04-16 06:20 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடும் சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2025-04-16 05:36 GMT

பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாஜக யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக யுவமோர்ச்சா தலைவராக தற்போது கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா இருந்து வருகிறார்.

2025-04-16 05:22 GMT

அமைச்சர் பொன் முடி, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அண்மையில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. 

Tags:    

மேலும் செய்திகள்