அன்புமணி ராமதாஸ் அல்ல: அன்புமணி மட்டுமே - ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது. என் பெயரையும் அவர் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம்
சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிற்து.
இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் தவெக பிரசாரம் நடைபெறவுள்ள இடத்தில் எஸ்.பி. ஆய்வு
விஜய் பிரசார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம்; நெதன்யாகுவுடன் சந்திப்பு
2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளார்.
பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு, உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகை தர உள்ளார். அவர் காலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11 மணி அளவில் வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகிறார்.
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோவை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.