இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

Update:2025-10-18 09:36 IST
Live Updates - Page 4
2025-10-18 06:55 GMT

நெல் கொள்முதல்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-

நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-10-18 06:47 GMT

‘வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது' - ராஜ்நாத் சிங்


இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்துள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


2025-10-18 06:45 GMT

திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு - நாளை முன்பதிவு தொடக்கம்


ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.


2025-10-18 06:05 GMT

பாஜக அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி


நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


2025-10-18 06:03 GMT

ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு



ஆகாஷிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அதனை மீறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.

2025-10-18 06:01 GMT

நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.


2025-10-18 06:00 GMT

தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸ்


தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


2025-10-18 05:28 GMT

வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு


வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தேனி வருசநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வருசநாடு-கண்டமனூர் பகுதியில் வேளாண் நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்த‌து. சாலையில் வெள்ளநீர் புகுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

2025-10-18 05:24 GMT

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசு வெடிக்க தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களில் மரமத்து மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோபுரங்களில் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் ஏற்படா வண்ணம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-10-18 05:20 GMT

சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி


சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வளசரவாக்கம் மண்டலத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்