இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025

Update:2025-11-19 09:19 IST
Live Updates - Page 2
2025-11-19 12:00 GMT

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் வதந்தி - தமிழக அரசு விளக்கம்


காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2025-11-19 11:30 GMT

இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..? 


வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025-11-19 11:28 GMT

மீண்டும் அந்த ஹீரோ, இயக்குனருடன் இணையும் சாய் பல்லவி? 


தனுஷ் தற்போது 'அமரன்' இயக்குனரின் புதிய படத்தில் ஹீரோவா நடித்து வருகிறார். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இதில் கதாநாயகியாக மீனாட்சி சவதரி மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

2025-11-19 11:12 GMT

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு... நிலவரம் என்ன..?


தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

2025-11-19 11:07 GMT

பீகார் முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

2025-11-19 11:04 GMT

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி 


இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

2025-11-19 11:02 GMT

"பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ..." - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 


பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

2025-11-19 10:34 GMT

ஆந்திரா: போலீசார் அதிரடி சோதனை - 50 மாவோயிஸ்டுகள் கைது 


ஆந்திர மாநிலம் அல்லுரி சீதா ராமராஜு மாவட்டம் மாரேடுமில்லி மண்டலம் வனப்பகுதியில் நேற்று போலீசார் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி மாட்வி ஹிட்மாவும் அடக்கம்.

2025-11-19 10:33 GMT

நீலகிரியில் சிவன் கோவிலுக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு 


கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை கவ்விக்கொண்டு கரடி வனப்பகுதிக்குள் சென்றது.

2025-11-19 10:31 GMT

வங்கக்கடலில் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு 


அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்