நடிகர் ரவி மோகன் சொத்து முடக்கப்படுகிறதா? - மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி
ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாததால் நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்யக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில், 3 மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, அவற்றை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைப்பதற்கான முன்மொழிவையும் கொண்டு வந்துள்ளார். இதற்கான தீர்மானம் அவையில் ஏற்று கொள்ளப்பட்டது. இதன்பின்னர் மக்களவை மாலை 5 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
எஸ்.எஸ். ராஜமவுலி , ராஜ்குமார் ஹிரானி வரிசையில் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து 3 முறை (ஹாட்ரிக்) ரூ. 400 கோடி வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனரின் பட்டியலில் இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை 3 மணி வரை ஒத்தி வைப்பு
மக்களவையில் மூன்று மசோதாவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்து உள்ளார்.
எனினும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களை கிழித்து மத்திய மந்திரி அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். இதனால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மக்களவையில் மூன்று மசோதாவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்து உள்ளார்.
அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? - ரசிகர் மன்றம் விளக்கம்
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தவெக மாநாட்டை ஒட்டி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை- தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் தபால்காரர் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், "ஒரு மசோதா அனுப்பப்பட்டால் அதற்கு முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன; அவர் தபால்காரர் அல்ல" என்று வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் மசோதா செயல் இழந்துவிட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது. கவர்னரின் விருப்பபடிதான் செயல்படும் என்பதுபோல் ஆகிவிடும்" என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டு மதுரை கிளையில் சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் பேராசிரியை நிகிதாவின் கார், பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லாதது. நகை திருட்டு சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்பது உள்ளிட்ட விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி குறித்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கு மற்றும் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு அல்லது நிதியை அங்கீகரிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.