உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது. இந்தி மொழி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3வது மொழியாக இந்தி கற்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்லது என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி கைதான மகாவிஷ்ணு எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
உத்தரகண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலங்களை வாங்க தடை விதிக்க மசோதா தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மே 1- தேதி முதல் புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து 64,200 ரூபாயாகவும், ஒரு கிராம் 8,025 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கொடைக்கானல் ஜெரோனியம் வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தீ ஏற்பட காரணமானவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி நகராட்சியில் ரூ.21 லட்சம் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மீது ஊழல் புகார் தெரிவித்த ராஜலிங்க மூர்த்தி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.