இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025

Update:2025-11-21 08:51 IST
Live Updates - Page 4
2025-11-21 05:46 GMT

98வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனையில் ‘கெவி’ திரைப்படம்


மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான கெவி படம் ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2025-11-21 05:44 GMT

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த திமுக - அன்புமணி கண்டனம் 


நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

2025-11-21 05:42 GMT

தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் 3 ‘டி.வி.கே.’ - விஜய் கட்சியினர் அதிர்ச்சி 


மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

2025-11-21 05:16 GMT

கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: மு.க.ஸ்டாலின் சூளுரை


தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

2025-11-21 05:14 GMT

மதுரை அருகே குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது தீ பிடித்த வேன்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது வேன் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குழந்தைகளை வாகனத்தில் இருந்து வெளியேற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. 

2025-11-21 05:07 GMT

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிப்பா?.. கீர்த்தி சுரேஷின் கருத்தை எதிர்த்த விஜய் ஆண்டனி!


ஏஐ தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பு அதிகரித்து வரும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

2025-11-21 05:04 GMT

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தனுஷ் பட நடிகை 


பாலிவுட் நடிகை சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகப் போகிறார். இதை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.

2025-11-21 05:00 GMT

ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி


ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து நூதன மோசடி அரங்கேறி வருகிறது.

2025-11-21 04:18 GMT

ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்'....எப்போது எதில் பார்க்கலாம்?


ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 'தி கேர்ள் பிரண்ட்'. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் கன்னட நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.


2025-11-21 04:16 GMT

வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்: தமிழக அரசு 


சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்