இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025

Update:2025-06-22 09:15 IST
Live Updates - Page 3
2025-06-22 06:53 GMT

பெங்களூரு சாலையில் 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர்கள் பேரணி

கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்சி சேவையை மீண்டும் அனுமதிக்ககோரி 8 மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். 

2025-06-22 06:45 GMT

இஸ்ரேலில் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ் ஜியோனா ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 16 பேர் காயமடைந்து உள்ளனர்.

2025-06-22 06:43 GMT

டிரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் ஆதரவு

இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இடையே பதற்றத்தை தடுத்த தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த ஆதரவை தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பிரச்சினையில் டிரம்ப் தலையீடு செய்ததற்கு அங்கீகாரமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2025-06-22 05:55 GMT

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் : எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசேலம் நகர், சர்ச் சாலை, ரத்ன குமார் அவென்யூ, மருதம் குடியிருப்பு, ஏ.எஸ்.ராஜன் நகர், ஜிகே மூப்பனார் அவென்யூ, சிட்லபாக்கம் ஜோதி நகர், சிட்லபாக்கம் 1-வது மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, ரங்கநாதன் சாலை, கண்ணதாசன் தெரு மற்றும் அய்யாசாமி தெரு.

பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை குடியிருப்பு வாரியம், டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎச் நியூ காலனி 13-14, 17-வது குறுக்கு தெரு, மல்லிகா நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்கேவி அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் சாலை, பங்காரு நகர். தரமணி: அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் குடியிருப்பு (கிரியாஸ் அருகே), தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி, சாஸ்திரி நகர், பார்க் அவென்யூ.

2025-06-22 05:39 GMT

சென்னையில் இருந்து மதுரை நோக்கி இன்று காலை 10.15 மணியளவில் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், உடனடியாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 67 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். விமானம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

2025-06-22 04:34 GMT

அமெரிக்கா தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம்

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான ஆபத்தான ஆக்கிரமிப்பு, சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்று ஹமாஸ் கூறியுள்ளது. 

2025-06-22 04:32 GMT

அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக, ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.

2025-06-22 04:26 GMT

அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விட்டுள்ளார்.

இதுபற்றி ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.

2025-06-22 04:15 GMT

அமெரிக்காவின் தாக்குதலால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை - ஈரான்

அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது, தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும். முதற்கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்