சொகுசு விடுதிக்குள் 6 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட தொழிலாளி மீட்பு
கேரளா மாநிலம் பாலக்காட்டில் சொகுசு விடுதிக்குள் 6 நாட்களாக அடைத்து வைக்கப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெள்ளையன் என்பவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 நாட்களாக அவரை துன்புறுத்தி உணவு, தண்ணீர் எதுவும் வழங்காமல் அடைத்து வைத்திருந்த விடுதி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மீறல்.. சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு
நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார்
பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள், மர்ம நபரைப் பிடித்தநிலையில், தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது - சுப்ரீம்கோர்ட்டு
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது என்றும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
உணவளிப்பதற்கென தனி இடத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டெல்லியில் பிடிக்கப்பட்ட தெருநாய்களை கருத்தடை செய்த பின் மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டின் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மாற்றி, 3 நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதன்படி கருத்தடை ஊசி செலுத்தப்பட்ட பிறகு நாய்களை மீண்டும் அதே தெருவில் விட வேண்டும் என்றும் ரேபிஸ், தொற்று உள்ள நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்பன உள்பட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கடுத்த 2 நாட்களில் வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன
“தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார்..” - ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்கு தான் பின்னடைவாக மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் வரும் 24ம் தேதி தமிழ்நாடு வருகை
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வரும் 24ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜன்தன்' வங்கி கணக்கு செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் செயல்படாதா? - மத்திய அரசு விளக்கம்
மத்திய-மாநில அரசுகளின் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இல்லலாமல் இருந்த நிலையில் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி 'ஜன்தன்' திட்டத்தை கொண்டு வந்தார்.
ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடக்கம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-
கடந்த 4 மாதங்களில் இஸ்ரோ பல சாதனைகளை செய்துள்ளது. பேரிடர் எச்சரிக்கை துறையில் இஸ்ரோ ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. ஐ.நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் மொத்தம் 13 இலக்குகள் இஸ்ரோவால் ஆதரிக்கப்படுகின்றன.
'கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளோம். சோதனைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. உள்நாட்டு மயமாக்கலில் பல நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. ஆதித்யா எல்-1- ஐ பொறுத்தவரை, இந்த ஆண்டு நாங்கள் 13 'டெராபிட்' தரவை வெளியிட்டுள்ளோம்."
முதல் ஆளில்லா விண்கலமான ககன்யான் 1, இந்த ஆண்டு இறுதிக்குள். ஒருவேளை டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும். அதில், அரை மனித உருவமான வியோமித்ரா (ரோபட்) பறக்கப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.