இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Aug 2025 7:10 PM IST
''சினிமாவிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம்...'' - மனம் திறந்த சாய் மஞ்ச்ரேக்கர்
நடிகை சாய் மஞ்ச்ரேக்கர் தனது திரைப்படத் தேர்வுகளை பற்றி தெரிவித்தார். அதிகப்படியான படங்களில் நடிப்பதை விட சரியான படங்களில் நடிப்பதையே முக்கியமாகக் கருதுவதாக கூறியுள்ளார்.
- 22 Aug 2025 6:28 PM IST
'டியூட்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'டியூட்' படத்தின் முதல் பாடலான ''ஊரும் பிளட்'' வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
- 22 Aug 2025 6:08 PM IST
அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறாரா ஏஞ்சலினா ஜோலி?
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அமெரிக்காவில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டு குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 22 Aug 2025 5:27 PM IST
''ஹைலேண்டர்'' பட ரீமேக்கில் ''ஜுமான்ஜி'' பட நடிகை
ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஹைலேண்டர்'' பட ரீமேக்கின் முக்கியமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தில், ஹென்றி கேவில், ரஸ்ஸல் குரோவ், டேவ் பாடிஸ்டா, மரிசா அபேலா ஆகியோர் நடிக்கும்நிலையில், தற்போது ''ஜுமான்ஜி'' பட நடிகை கரேன் கில்லன் இணைந்துள்ளார்.
- 22 Aug 2025 5:08 PM IST
தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன் - அமித்ஷா
நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன்.
மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பாஜகவிற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சிபி ராதாகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார்.
பிரதமர் மோடி தமிழ் மண்ணையும், மக்களையும் எப்போதும் உணர்ந்தவர். தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர் மோடி. சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- 22 Aug 2025 4:44 PM IST
அமீர்கான் பற்றி ''கூலி'' பட நடிகை மோனிஷா பேச்சு
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ''கூலி'' படத்தில் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்த மோனிஷா, அப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த அமீர்கானுடன் பேசியது பற்றி வெளிப்படுத்தினார்.












