மனிதநேயத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறிய மோடி அரசு - சோனியா காந்தி
மோடி மற்றும் நெதன்யாகு இடையிலான தனிப்பட்ட நட்பைக் கருத்தில்கொண்டு அரசு செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பாலஸ்தீன பிரச்னையில் மோடி அரசு மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறிவிட்டது, ஆழ்ந்த மவுனம் காக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நலன்களை விட, மோடி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பால், அரசின் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தனி இணையதளம் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குல்தீப் யாதவ் அபார சாதனை
வங்காள தேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (செப்டம்பர் 26)
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி. நினைவு நாள்: "உன்னை நினைக்காத நாளில்லை" - கவிஞர் வைரமுத்து பதிவு
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
‘பொன்மாலைப் பொழுது’
உன் குரலின்
அழகியல் வசீகரம்
‘சங்கீத ஜாதிமுல்லை’
கண்ணீரின் திருவிழா
‘காதல் ரோஜாவே’
கவிதைக் கதறல்
‘வண்ணம்கொண்ட
வெண்ணிலவே’
காதலின் அத்வைதம்
‘பனிவிழும் மலர்வனம்’
சிருங்காரச் சிற்பம்
‘காதலே என் காதலே’
தோல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்
கொரோனா காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது என்னுடன் இணைந்து திறம்பட பணியாற்றிய பீலா வெங்கடேசன் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மறைந்தது அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. அவரது மறைவால் வாடும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மும்பையில் முதல்முறையாக இரவு நேர பார்முலா கார் பந்தயம்
மகாராஷ்டிராவில் முதல்முறையாக இரவு நேர பார்முலா கார் பந்தயம், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. நவி மும்பையில் பாம் கடற்கரை சாலை மற்றும் நேருல் ஏரி வழியாக 14 திருப்பங்களுடன், 3.75 கி.மீ தூரத்திற்கு பந்தய சாலை அமைக்கப்படுகிறது.