இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

Update:2025-09-25 09:10 IST
Live Updates - Page 4
2025-09-25 05:30 GMT

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


உடல் நலக்குறைவால் காலமான ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேஷன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.


2025-09-25 05:03 GMT

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது அக்னி பிரைம் ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முறையாக ரெயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்ததாக டிஆர்டிஓ ( பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரெயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது. வெற்றிகரமாக அக்னி பிரைம் ஏவுகணை சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

2025-09-25 04:57 GMT

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ வைரல்




2025-09-25 04:49 GMT

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு


நம் நியாயமான கோரிக்கைக்கும், கூக்குரலுக்கும். இன்றைய தமிழக அரசு செவிசாய்க்காதது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


2025-09-25 04:47 GMT

முப்படை தலைமை தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. ராணுவத்தில் 1981ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை நியமித்துள்ளார். பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது


2025-09-25 04:45 GMT

காகிதப்புலி என விமர்சித்த டிரம்ப்... பதிலடி கொடுத்த ரஷியா


உண்மையான ராணுவ அதிகாரம் கொண்ட எந்த ஒரு நாடும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாரம் போதும். இப்படி மூன்றரை ஆண்டுகளை எடுத்து கொள்ளாது. இதனால் ரஷியா ஒன்றும் தனித்துவ நாடு அல்ல. உண்மையில், அவர்கள் ஒரு காகிதப்புலி போன்று இருக்கிறார்கள் என கிண்டலாக டிரம்ப் கூறி இருந்தார். 

2025-09-25 04:43 GMT

ரகசா புயல்: தைவான், பிலிப்பைன்சில் 27 பேர் பலி; ஹாங்காங்கில் 100 பேர் காயம்


ஹாங்காங்கில் 36 மணிநேர இடைவெளிக்கு பின்னர், சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கின.


2025-09-25 04:41 GMT

“ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா


சீனா தனது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையானதைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-09-25 04:38 GMT

டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த சைப் ஹசன்


ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் சைப் ஹசன் 5 சிக்சர்கள் விளாசினார்.

2025-09-25 04:37 GMT

இறுதிப்போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் - சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக்.வீரர் பதில்


இந்த தொடரில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை 2 முறை வீழ்த்தி இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 15 ஆட்டங்களில் 12-ல் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்