இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

Update:2025-09-25 09:10 IST
Live Updates - Page 5
2025-09-25 04:35 GMT

வம்பிழுத்த பாக்.வீரர்.. தரமான பதிலடி கொடுத்த ஹசரங்கா.. வீடியோ வைரல்


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதில் இலங்கை நிர்ணயித்த 134 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் ஹசரங்கா, அப்ரார் அகமது வீசிய பந்தில் அவர் கிளீன் போல்ட்டாகினார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய அப்ரார் அகமது, ஹசரங்கா கொண்டாடுவதை போல் அவருக்கு முன் கைகளை அசைத்து கொண்டாடி வழியனுப்பி வைத்தார்.

2025-09-25 04:33 GMT

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறும் அபிஷேக் சர்மா..? வெளியான தகவல்


இந்திய ஒருநாள் அணியில் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள அபிஷேக் சர்மா இன்னும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை.


2025-09-25 04:30 GMT

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: வைபவ் சூர்யவன்ஷி மாபெரும் சாதனை


இந்த ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி இதுவரை 41 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.


2025-09-25 04:28 GMT

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு கோரும் ஸ்ரேயாஸ் ஐயர்..?


ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருந்தார்.


2025-09-25 04:27 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டம்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருதை வென்றது யார்..?


ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் 'இம்பேக்ட் வீரர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.


2025-09-25 04:25 GMT

ஐ.சி.சி. டி20 தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம்


டி20 போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார்.


2025-09-25 04:23 GMT

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் 2 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளன. ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.


2025-09-25 04:19 GMT

சற்று குறைந்த ஆபரண தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்றும் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.  


2025-09-25 03:51 GMT

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொல்லம்-ஹூப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்


சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொல்லம்-ஹூப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.


2025-09-25 03:49 GMT

‘சென்னை ஒன்று செயலி’யில் ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது - தெற்கு ரெயில்வே தகவல்


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஒன்று செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்