இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

Update:2025-11-25 09:28 IST
Live Updates - Page 3
2025-11-25 06:25 GMT

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனம் தொடுத்த வழக்கு...கோர்ட்டு அதிரடி உத்தரவு  


ரங்கராஜ் மீது புகார் அளித்த ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.


2025-11-25 06:24 GMT

நாளை மறுநாள் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு 


சுபமுகூர்த்த தினமான 27.11.2025 அன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2025-11-25 06:17 GMT

அயோத்தி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு


பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலுக்குச் சென்றார். காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோவில்களுக்கு சென்று பிரதமர் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோவிலுக்கு சென்றார்.

காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலுக்குச் சென்றார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்தார்.

2025-11-25 06:12 GMT

முதல்-அமைச்சரின் கோவை வருகைக்கு பாஜகவினர் எதிர்ப்பு

45 ஏக்கரில் செம்மொழி பூங்காவை திறந்துவைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

மெட்ரோ ரெயில் விவகாரத்தில் தவறான அறிக்கையை தமிழக அரசு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.

2025-11-25 06:07 GMT

மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை

மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள், சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-11-25 05:54 GMT

இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி 


இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

2025-11-25 05:40 GMT

41 பேர் பலியான வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை 


தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக இன்றும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

2025-11-25 05:26 GMT

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மறுசீரமைப்பு - பசுமை பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட அனுமதி

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள பழைய கழிவுகளை அகற்றி நிலத்தை மீட்கும் பெரும் திட்டத்திற்கு நிதி திரட்ட பசுமை நகராட்சி பத்திரங்கள் வெளியிட அனுமதி அளித்து நகராட்சி நிர்வாக துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஸ்வச்பாரத் 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.646.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பங்கான 59 சதவீத நிதியைத் திரட்ட பசுமை பத்திரங்கள் மூலம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

2025-11-25 05:07 GMT

சென்னையில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம்: இன்று கடைசி நாள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உதவி மையம் இன்றுடன் முடிவடைகிறது. படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-25 05:02 GMT

‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘பராசக்தி’ திரைப்படம் பொங்கலை ஒட்டி ஜன.14ம் தேதி  வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்