இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

Update:2025-11-25 09:28 IST
Live Updates - Page 4
2025-11-25 04:35 GMT

டெல்லியில் காற்று மாசுபாடு.. அனைத்து அலுவலகங்களுக்கும் பறந்த உத்தரவு

டெல்லியில் காற்று மாசு தாறுமாறாக உயர்ந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே வர உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025-11-25 04:24 GMT

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன..? 


இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1.660 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-11-25 04:21 GMT

திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா? - நீதிபதி அதிருப்தி 


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபமண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

2025-11-25 04:20 GMT

‘அரசன்’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி 


அரசன் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1, 2 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-11-25 04:19 GMT

அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி 


ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

2025-11-25 04:18 GMT

கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழி பூங்கா: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்


கோவையில் தொழில்முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடுகிறார்.

2025-11-25 04:16 GMT

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பா..? 


சென்னைக்கு 29-ந்தேதி மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

2025-11-25 04:10 GMT

’நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை’ - கீர்த்தி ஷெட்டி 


கீர்த்தி ஷெட்டி தற்போது ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார்.

2025-11-25 04:09 GMT

பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் 


வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு பயங்கரவாதிகள் அந்த ராணுவத்தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

2025-11-25 04:07 GMT

த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன் ? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு 


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்