இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

Update:2025-08-26 09:06 IST
Live Updates - Page 6
2025-08-26 03:42 GMT

காசா தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் பலி; பிரதமர் ஆழ்ந்த வருத்தம்


காசாவின் தெற்கே அமைந்த முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களும் அடங்குவர்.


2025-08-26 03:41 GMT

'மதராஸி'யை யாரெல்லாம் பார்க்கலாம்...- சென்சார் வழங்கிய சான்றிதழ் என்ன?


சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


2025-08-26 03:39 GMT

வெள்ள எச்சரிக்கை குறித்து பாகிஸ்தானை அக்கறையுடன் எச்சரித்த இந்தியா


சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

2025-08-26 03:38 GMT

இன்றைய ராசிபலன் - 26.08.2025

மகரம்

பெண்களின் சேமிப்புஉயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தடையாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். தங்களுக்கு அனைத்துவிதத்திலும் சுலபமாக முடியும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்-

அதிர்ஷ்ட நிறம்: கிரே

Tags:    

மேலும் செய்திகள்