காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என எச்சரிக்கை
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த கோர்ட்டு தடை விதித்ததை சுட்டிக்காட்டி இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், நாளை (செப்டம்பர் 27) முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
''வெற்றிகளை விட தோல்விகள்தான் எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்தன''- பூமி பெட்னேகர்
சமூக ஊடகங்களில் பெண்களை குறிவைத்து டிரோல்கள் வருவதாக பூமி பெட்னேகர் கூறினார்.
நயினார் நாகேந்திரன் அலுவலக உதவியாளர் மீது வழக்கு
மத மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் பாதிரியார் டேவிட் நிர்மல்துரை என்பவரின் பணியை தடுத்து மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் அங்குராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை மிரட்டல், மத மோதலை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பலி
கோவை சிங்காநல்லூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பானுமதி (52) பலியானார்.
காமராஜர் சாலையில் அதிகாலை 5 மணியளவில் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மறைந்த மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
காஜல் அகர்வால் முதல் கீர்த்தி ஷெட்டி வரை...தெலுங்கு படங்களுக்கு இடைவெளி விட்ட நடிகைகள்
தெலுங்கில் தொடர் படங்களில் பிஸியாக இருந்த பல நடிகைகள் தற்போது இடைவெளி விட்டுள்ளனர்.
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
இந்த வருடம் நடைபெற்ற 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.
அந்த வகையில் நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சீசனுக்கு முன்னதாக தங்களது புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிசா கீட்லியை நியமித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பா? - செங்கோட்டையன் விளக்கம்
சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
'''கில் பில்' மாதிரி படம் பண்ண ஆசை'' - ஸ்ரேயா ரெட்டி
ஸ்ரேயா ரெட்டி தற்போது இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' படத்தில் நடித்துள்ளார்.