2025-30ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று மாலை 4 மணிக்கு கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா திகழ்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதல்-மந்திரி யோகி பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மின்னணுத் துறை ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் 12 பில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு. நடப்பு நிதியாண்டிலேயே 12 பில்லியன் டாலரை தமிழ்நாடு எட்டும் என கடந்தாண்டு ஜூலை மாதத்திலேயே அறிவித்திருந்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி சி முதல் 41 டிகிரி சி வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 2030ம் ஆண்டுக்குள்ளாக தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாளையங்கோட்டை அடுத்த திருத்து பகுதியில் கருப்பசாமி பாண்டியன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு அனுமதி, அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை; வேலை நிறுத்தபோராட்டத்தில் 4000 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில் அண்ணாமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.