இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

Update:2025-10-28 09:27 IST
Live Updates - Page 3
2025-10-28 05:46 GMT

திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சிக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் 2,500 திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சிக்கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2025-10-28 05:21 GMT

ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் மீட்பு

சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டிடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் உத்தரவை அடுத்து கட்டிடத்தில் செயல்பட்ட ஓட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஓட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

2025-10-28 05:17 GMT

‘மோந்தா’ தீவிரப் புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் நிலவி வரும் ‘மோந்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடித்து வருகிறது. 

2025-10-28 05:12 GMT

வீடியோ எடுக்க முயன்றபோது ஆற்றுக்குள் விழுந்த பாஜக எம்.எல்.ஏ.


தலைநகர் டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் நெகி. இவர் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


2025-10-28 05:08 GMT

பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?


கிர்த்தீஸ்வரன் இயக்கிய 'டியூட்' படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.


2025-10-28 05:07 GMT

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: ஆஸி. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் விலகல்


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.


2025-10-28 05:06 GMT

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகார்


தனது புகைப்படங்களை டீப் பேக் வீடியோவாக உருவாக்கி, ஆபாச தளங்களில் வெளியிட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகாரளித்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இவ்வாறு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்


2025-10-28 05:04 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக சரிவு


அணையில் இருந்து கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.


2025-10-28 05:03 GMT

சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை மையம் தகவல்


மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


2025-10-28 04:42 GMT

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்ததால் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்