மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார் - ஜாய் கிரிஸில்டா புகார்
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
ஆசிய கோப்பை: இந்திய அணி துபாய்க்கு செல்வது எப்போது..? வெளியான தகவல்
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல் - போலீஸ் எச்சரிக்கை
பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் வழியாக பீகாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ராகுல் காந்தி பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாதா கோவில் திருவிழா இன்று ஆரம்பம்.. வேளாங்கண்ணியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
“75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறினேனா..?” - விளக்கம் அளித்த மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது அய்யப்ப பக்தராக மாறினார் - கேரள பாஜக தலைவர் கேள்வி
கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பம்பையில் நடத்தப்படும் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் அரசியல் நாடகம். இதனை அரசியலாக்க வேண்டாம் என பினராயி விஜயன் கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார். அய்யப்ப பக்தர்கள் சங்கமம், அரசியல் இல்லையென்றால் தேவஸ்தான தலைவர் தான் சென்னைக்கு சென்று இருக்க வேண்டும்.
அங்கு மந்திரிக்கு என்ன வேலை. எதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தீர்கள். அவர் எப்போது அய்யப்ப பக்தரானார். இது அரசியல் நாடகம். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அய்யப்ப பக்தர்கள் சங்கமம் அரசியல் நாடகம் அல்லாமல் வேறென்ன?
அய்யப்ப பக்தர்கள் சங்கமம் அரசு நிகழ்ச்சியல்ல, தேவஸ்தானம் நடத்தும் நிகழ்வு என பினராயி விஜயன் கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாத. தேவஸ்தானத்திற்கு இது தேவை தானா? என கேள்வி எழுகிறது. அய்யப்ப பக்தர்களை வேட்டையாடிய பினராயி விஜயன், அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க தகுதி இல்லாதவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஐ.டியில் அரசு பள்ளி மாணவர்கள்: திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? - அன்புமணி
அரசு பள்ளிகளிலிருந்து 28 மாணவர்கள், சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
விஜய் தனித்து நின்றால் தாக்கத்தை ஏற்படுத்துவார் - பிரேமலதா விஜயகாந்த்
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று தெரிவித்தார்.
ரம்ஜான் நோன்பின்போது எனர்ஜி டிரிங் குடித்த சர்ச்சை.. மவுனம் கலைத்த முகமது ஷமி
ரம்ஜான் மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஒன்றின்போது அவர் எனர்ஜி பானம் குடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், ஜகாரி ஸ்வஜ்டா (அமெரிக்கா) உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், அடுத்த 3 செட்டுகளை வரிசையாக கைப்பற்றி வெற்றி பெற்றார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-7, 6-3, 6-3 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் 3-வது சுற்றில் கேமரூன் நோரி உடன் மோதுகிறார்.