இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

Update:2025-08-29 09:14 IST
Live Updates - Page 5
2025-08-29 04:37 GMT

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..? விராட், சச்சினுக்கு எத்தனையாவது இடம்..?

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பல வீரர்கள் பிரபலம் ஆகி உள்ளனர். கிரிக்கெட் என்பது விரும்பி விளையாடும் விளையாட்டாகவும், அதிகம் பின்பற்றப்படும் விளையாட்டாகவும் இருப்பதால், வீரர்கள் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், டி20 லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் வீரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்.

2025-08-29 04:36 GMT

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் இன்று (இரவு 8.30 மணி) மோதுகின்றன.

2025-08-29 04:35 GMT

துலீப் கோப்பை: படிதார்,தனிஷ் மலிவார் அபார சதம்.. முதல் நாளில் மத்திய மண்டலம் இமாலய ரன் குவிப்பு


62-வது துலீப் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தின் மைதானங்களில் நேற்று தொடங்கியது.

2025-08-29 04:33 GMT

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ்,

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஷி யியுடன் மல்லுக்கட்டினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வாங் ஷியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை சந்திக்கிறார்.

2025-08-29 04:30 GMT

புரோ கபடி லீக்: இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்


புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10). டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

2025-08-29 04:28 GMT

பாஜக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருமா? - நயினார் நாகேந்திரன் பதில்

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பீகாரில் ராகுல்காந்தி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டி வருகிறார். அவருடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று இருப்பது வருத்தம் அளிக்கிறது.

ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ள 65 லட்சம் பேர் இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ராகுல்காந்தியுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் சேகர்பாபு என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் ஒரு பயத்தில் என்னை அப்படி பேசி வருகிறார். ஆனாலும் பரவாயில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார். அவர் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2025-08-29 04:27 GMT

50 சதவீதம் வரிவிதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி கடும் பாதிப்பு


அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.


2025-08-29 04:23 GMT

வேகமெடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை நெருங்குகிறது - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து வேகமெடுத்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் தங்கம் விலை உயரும்பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் ரூ. 76 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.131-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

2025-08-29 04:00 GMT

கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநரின் புதிய படத்தின் பூஜை வீடியோ


இந்த புதிய படத்தின் பூஜை சிறப்பாக நடந்தது. இந்த பூஜையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சசிகுமார், ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.


2025-08-29 03:58 GMT

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கால அளவு குறைகிறது: வெளியான முக்கிய தகவல்


அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசா கால அளவை குறைக்க டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்