இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

Update:2025-04-30 09:24 IST
Live Updates - Page 4
2025-04-30 04:29 GMT

மதுரை: சிறுமி உயிரிழப்பு - மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து

மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த நிலையில், ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மழலையர் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மதுரை மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் பள்ளி உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2025-04-30 04:08 GMT

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?.. இன்று மீண்டும் மோதல்


10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.


2025-04-30 04:06 GMT

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்பு


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார்.


2025-04-30 04:05 GMT

'அட்சய திருதியை': இன்றையை தங்கம் விலை நிலவரம் என்ன..?


அட்சயதிருதியை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமால் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. இதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.


2025-04-30 04:04 GMT

4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்


மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 4 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஆர்.டி.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி, விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்துள்ளனர்.


2025-04-30 04:02 GMT

எனக்காக என் மனைவி பல தியாகங்களை செய்துள்ளார் - அஜித் குமார்


பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், "பத்மபூஷன் விருது வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற விருதுகளை வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. நான் சரியான பாதையில் இருப்பது போல் உணர்கிறேன். 33 வருடங்களாக என் வேலையை நேசித்து செய்கிறேன், என்னுடைய வாழ்க்கையை நான் எளிதாக வாழ விரும்புகிறேன்" என தெரிவித்தார்.


2025-04-30 04:01 GMT

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


2025-04-30 03:59 GMT

கொல்கத்தா: ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி


மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணயளவில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர். கட்டிடத்தின் 4 வது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர்.


2025-04-30 03:56 GMT

இன்றைய ராசிபலன் - 30.04.2025


சிம்மம்

உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்


Tags:    

மேலும் செய்திகள்