என்.ஐ.ஆர்.எப் தரவரிசை- சென்னை ஐஐடி முதலிடம்
2025 தேசிய நிறுவனங்களின்தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடம் பிடித்துள்ளது, மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது .
பள்ளி வேன் மீது பேருந்து மோதி காவலாளி பலி
உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளியின் முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதல் வலையில் சிக்கி, பணத்தை இழந்த ஜப்பான் மூதாட்டி
ஜப்பானில் தான் ஒரு விண்வெளி வீரர் எனக் கூறி சமூக வலைதளத்தில் பேசிய நபரிடம் காதல் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணம் |கொடுத்து ஏமாந்துள்ளார் 80 வயது மூதாட்டி. விண்வெளியில் தான் சிக்கிவிட்டதாகவும், அவசரமாக ஆக்சிஜன் வாங்க பணம் தேவை என்றும் கூறி பணம் கேட்டுள்ளார்.
ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு. உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு. ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு.
வரி விதித்து எங்களை கொல்கிறது இந்தியா - டிரம்ப் குற்றச்சாட்டு
சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது. அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்த உலகில் வரி விதிப்பு பற்றி என்னை விட நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை,
சிறுபான்மையின மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ரூ .3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்ததால் 16 கண் மதகுகள் வழியே வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 29,300 கன அடியில் இருந்து 23,300 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
சூதாட்ட செயலி விளம்பரம்; ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது.
ஐபிஎல் டிக்கெட் விலை மேலும் உயர்கிறது
ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 28%லிருந்து 40%ஆக உயர்கிறது. கசினோ, ரேஸ் கிளப்புகளுக்கும் 28%லிருந்து 40% ஆக அதிகரிக்க உள்ளது.
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் கட்டாயம்
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க முடியாவிட்டால் உரிமையாளர்கள் நாய்களை சாலையில் விட்டுச் செல்கின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.