டிரம்ப் விருந்தில் புறக்கணிக்கப்பட்ட எலான் மஸ்க்
முன்னணி தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ.க்களுக்கு விருந்தளித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இந்த விருந்தில் டிம் குக், மார்க் ஸகர்பெர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
*ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் ஹிந்துஜா குழுமம்
* ரூ.176 கோடியில் சென்னையில் உலகளாவிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மையத்தை நிறுவும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்
* ரூ.13,016 கோடி முதலீடுகள் மூலம் 17,813 வேலைவாய்ப்புகள் உருவாகும்
“செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை” - திருமாவளவன்
இன்று மனம் திறந்து பேசப்போவதாக சொல்லியிருந்தார் செங்கோட்டையன். ஆனால் முழுமையாக மனம் திறக்கவில்லை என்றே அவர் பேட்டியிலிருந்து தெரிகிறது. யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என அவர் வெளிப்படையாகவே சொல்லலாம். இருப்பினும் அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தண்ணீரில் தத்தளிக்கும் டெல்லி
டெல்லியில் அபாய அளவைத் தாண்டி யமுனை பாயும் நிலையில், கனமழையும் பெய்வதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக நீடிக்கின்றன. தலைமைச் செயலகம், முதல்-மந்திரி உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளையும் வெள்ள நீர் விட்டுவைக்கவில்லை
ஜெலென்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு
அமைதி பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு வருமாறு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ஜெலென்ஸ்கிக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - பிரேமலதா
அதிமுக-வை சேர்ந்தவர்கள் கூடி பேசி முடிவெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்போம். இவையாவும் அதிமுக-வின் உட்கட்சி பிரச்சினை என்பதால் நான் அதிகம் கருத்து கூற முடியாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐநா எசசரிக்கை
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 என்றளவில் சரிந்துள்ளதாக ஐநா மக்கள் தொகை நிதி முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது. |நிலையான மக்கள்தொகையை பராமரிக்க 2.1 என்ற சராசரி கருவுறுதல் விகிதம் தேவை என்பதால், இந்த சரிவு மக்கள் தொகை வளர்ச்சியை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசியுள்ளார் செங்கோட்டையன். அவர் கருத்தை வரவேற்கிறேன். 10 நாட்கள் கெடு முடிந்தபின் என் கருத்தை சொல்கிறேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் கருத்து உள்ளது என்று சசிகலா கூறியுள்ளார்.
தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி
சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி இன்று நடந்தது.தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சீமா அகர்வால் கலந்துகொண்டு இதனை பார்வையிட்டார்.