திண்டுக்கல் சிறுமலை மலைப்பாதையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால், பயங்கரவாத தக்குதலுக்கு திட்டமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் காணொலி காட்சி வழியே இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்குங்கள் என வேளாண் துறையினரிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டதுடன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அடிமட்ட அளவில் விரைவாக அமல்படுத்தும்படியும் வலியுறுத்தினார்.
இந்த பட்ஜெட்டை தற்போது திறம்பட அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ச்சிக்கு முதல் இயந்திரம் என்று வேளாண்மை கருதப்படும் சூழலில், இந்த அரசானது, வேளாண் வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளம் ஆகியவற்றை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
தஞ்சையில் அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் 5 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் உடல்நலம் தேறியுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கர்நாடகாவின் மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம் மேற்கொண்ட ஒரு குடும்பத்தினர் காரில் சென்றபோது, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகலா தாலுகாவுக்கு உட்பட்ட சிக்கின்துவாடி பகுதியருகே விபத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 5 பேரும் பலியாகி உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு;
சீமானின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல்
நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
"அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" "தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்" - ராகுல்காந்தி
"மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும்"இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும்.என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்- முதலமைச்சர் ஸ்டாலின்