தூத்துக்குடியில் 16 ஆயுதப்படை காவலர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.;

Update:2025-10-18 06:59 IST

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 16 காவலர்களை தாலுகா காவலர்களாக பணி நியமனம் செய்யும் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், மாவட்ட காவல் அமைச்சுப்பணி, அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மேற்சொன்ன 16 காவலர்களுக்கு விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்