திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.;
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 06190/06191) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை முதல் (புதன்கிழமை) திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்றுசெல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.