ராமதாஸை சந்தித்தது ஏன்? சைதை துரைசாமி பதில்

தைலாபுரம் தோட்டத்திற்கு அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி வருகை தந்தார்.;

Update:2025-04-13 12:41 IST

விழுப்புரம்,

தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி வருகை தந்தார். அவர் ராமதாஸை சந்தித்து பேசினார்.

இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னைபாராட்டி இருந்தார். அதனால் ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன்.

இதனிடையே, ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.

பாமகவுக்கு நானே தலைவர் என அன்புமணி கூறிய நிலையில் முக்கிய நிர்வாகிகளை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்திருந்தார். நான்தான் தலைவர் என நேற்று கூறிய அன்புமணி தொண்டர்கள் விருப்பப்படி கூட்டணி என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்