ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டதாக அன்புமணி ராமதாஸ் பேசினார்.;

Update:2025-06-28 15:03 IST

சென்னை,

பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது;

"கடந்த 5 ஆண்டுகளாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை. ராமதாசாக இருந்து எது கூறியிருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். ராமதாசுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். ராமதாஸ் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ் கட்சிக்கும், விசிகவுக்கும் திடீர் பாசம் ஏன்? என்றைக்குமே ராமதாசை பற்றி புகழ்ந்து பேசாத திருமாவளவன், தற்போது பேசுவது ஏன்? வி.சி.க.வின் வன்னிஅரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. 3 பேர் தங்களது சுய லாபத்துக்காக ராமதாசை பயன்படுத்தி கொள்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாக மாறி விட்டார்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்