ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-10-09 01:13 IST

கோப்புப்படம் 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்பவர் கவிமணி (18 வயது). புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாநகர பேருந்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நோக்கி கவிமணி சென்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அந்த இளம்பெண் கூச்சல் போட்டார். உடனடியாக பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் கவிமணியை பிடித்து திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கவிமணியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்