தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர்.;

Update:2025-09-13 19:21 IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை மிரட்டியுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்யாநகரை சேர்ந்த சிங்கதுரை (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்