அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25% வரி: அடங்காத டிரம்ப்
இந்த புதிய வரி விதிப்பால் அதிகம் பாதிக்கும் நாடுகள் பட்டியலில் கனடா மற்றும் மெக்சிகோ உள்ளன.;
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நாடுகளின் மீது வரி விதித்து வருகிறார். இந்தியாவுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீதான வரியையும் அவர் உயர்த்தி வருகிறார். அண்மையில், அவர் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும் விதித்தார்.
தற்போது, அதே வகையில், லாரி இறக்குமதிக்கும் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நவம்பர் 1ம் தேதி முதல், பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா மற்றும் மெக்சிகோ அடங்குகின்றன.