200 தலீபான்களை கொன்றோம் - பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது.;
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அந்தாடு பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்த்து கொண்டுள்ளது. இதற்கிடையே எல்லையில் தெக்ரிக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. சமிபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் தெக்ரிக்-இ-தலீபான் அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உள்பட பல வீரர்கள் கொல்லப் பட்டனர்.
இதற்கிடையே கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுவில் பாகிஸ்தா விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெகரிக்-இ- தலீபான் அமைப்பின் தலை வரை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த நிலையில் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் நேற்று இரவு அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குத்லுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது.ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் பக்தியா,குனார், நங்க ர்ஹார் மற்றும் கோஸ்ட் பாகாணங்களில் இருந்து ஒரே நேரத்தில் தாக்குதல்களை தொடங்கினர்.
இதில் எல்லையோரத்தில் உள்ள குர்ராம், ஜெனர் வடக்கு வஜீரிஸ்தானில் பாகிஸ்தான் சோதனைச்சாவடிகலை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, பீரங்கி, ஷெல் தாக்குதல் மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினர்.இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவமும் பதிலடி தாக்குதலை தொடுத்தது. இருநாட்டு ராணுவங்கள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
எல்லையையொட்டிய 6க்கும் மேற்பட்ட இடங்களில் சண்டை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மீதான தாக்குதல்லை ஆப்கானிஸ்தானின் 201-வது காலித் பின் வாலித் ராணுவபடை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குனார், ஹெல்மண்ட் மாகாணங்களில் துராண்ட் கோட்டின் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து பல புற்க்காவல் நிலையங்களை தலீபான் படைகள் கைப்பற்றி உள்ளது என்றும் இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ஆப்கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 200 தலீபான்களை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆப்கனின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில், அக்.,11 மற்றும் 12ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், ஆப்கானிஸ்தானின் தலீபான்களும், தெஹ்ரிக் - இ - தலீபான் பாகிஸ்தான் அமைப்பும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். கோழைத்தனமான இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் மூலம் எல்லைப் பகுதிகளை சீர்குலைக்கும் மோசமான நடவடிக்கை.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, தலீபான்கள் முகாம்கள், பயங்கரவாத பயிற்சி மையங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 23 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். அதேவேளையில், 200க்கும் மேற்பட்ட தலீபான்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது.