அவருடைய பங்களிப்பு எங்களை வியக்க வைக்கிறது - இளம் வீரரை பாராட்டிய பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.;

Update:2025-10-13 20:40 IST

Image Courtesy: @BCCI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்தியா உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் முதன்மை விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பணியை இளம் வீரரான துருவ் ஜுரெல் கவனித்து வருகிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜுரெல் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் துருவ் ஜுரெல், அணி தான் தனக்கு முதலில் முக்கியம் என்று சுயநலமின்றி இந்திய அணியின் சூழ்நிலையை கணித்து விளையாடுவது பார்ப்பதற்கு வியப்பாக உள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோத்தே பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, நம் எல்லோருக்குமே துருவ் ஜுரெல் எவ்வளவு ஒரு சிறப்பான வீரர் என்பது தெரியும். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் 100 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டிக்ளரை நோக்கி செல்லப்போகிறோம் என்று தெரிவித்ததுமே அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார்.

இப்படி போட்டிக்கு என்ன தேவையோ அதை செய்யும் பக்குவத்துடன் அணி தான் முதலில் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டு அவர் சுயநலமின்றி விளையாடுவது மிகச் சிறப்பான ஒன்று. அவருடைய பங்களிப்பு எங்களை வியக்க வைக்கிறது. அதனால் தான் ரிஷப் பண்டுக்கு அடுத்த முதன்மை விக்கெட் கீப்பராக டெஸ்ட் அணியில் இடம்பிடித்து வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யும் அவர் பேட்டிங்கிலும் தொடர்ந்து நிலையான ரன் குவிப்பை வழங்கி வருகிறார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்