ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
முதல் சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனை உடன் மோதினார்.;
image courtesy:PTI
ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் கிறிஸ்டோபர் சென் உடன் மோதினார்.
இதில் முதல் சுற்றை பி.வி.சிந்து கைப்பற்றிய நிலையில் அடுத்த 2 செட்டுகளை கிறிஸ்டோபர்சென் கைப்பற்றி வெற்றி பெற்றார். சிந்து இந்த ஆட்டத்தில் 21-15, 16-21 மற்றும் 19-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.