கும்பம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் கும்ப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் விரய ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே வரவை விட செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லைகளும், அதனால் மன உளைச்சலும் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பது போல் இருந்தாலும் அது கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். இம்மாதம் உங்கள் எண்ணங்கள் செயலாக, யாரேனும் ஒருவருடன் இணைந்துதான் செயல்பட வேண்டும்.

புதன் வக்ரம்

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கன்னி ராசியில் உச்சமும், வக்ரமும் பெறுகிறார். புரட்டாசி 10-ந் தேதி இந்த நிகழ்வு நடைபெறஇருக்கிறது. இதன் விளைவாக இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் வரலாம். பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். கல்யாணம், காதுகுத்துவிழா போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும்.புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரலாம். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு லாபம் தரும் விதத்தில் விற்பனையாகலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

துலாம் - புதன்

புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் வருகிறார். பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் துலாம் ராசிக்கு வரும்பொழுது, பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் குறுக்கீடுகள் வந்தாலும் அதை வெல்லும் ஆற்றல் உங்களுக்குப் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு பலன்தரும். அவர்கள் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தால் வாய்ப்புகள் கைகூடும். காரிய வெற்றிக்கு நண்பர்களும், உறவினர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவுவர். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ -மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கலாம். பெண்கள் புத்துணர்ச்சியோடு புதுமை படைப்பர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்:- 18, 19, 23, 24, 29, 30, அக்டோபர்: 4, 5, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.


Next Story